Main Menu

கொவிட்-19 பரவல் அதிகரிப்பு: ஹங்கேரியில் தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பனின் தலைமை அதிகாரி கெர்ஜெலி குல்யாஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஹங்கேரி அறிமுகப்படுத்திய பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. எனினும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் ஒகஸ்ட் 15ஆம் திகதி வரை அனுமதிக்கப்படாது.

இந்தநிலையில், ஒகஸ்ட் 20ஆம் திகதி கொண்டாட்டங்கள் பொதுவாக புடாபெஸ்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன.

ஆகையால், தொற்று பரவல் காரணமாக, தேசிய விடுமுறை தின கொண்டாட்டங்கள் மற்றும் வான வேடிக்கைகள் உள்ளிட்டவற்றை இரத்து செய்வதாக ஹங்கேரி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமரின் தலைமை அதிகாரி கெர்ஜெலி குல்யாஸ் கூறுகையில், ‘மே மாத ஆரம்பத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாங்கள் அறிமுகப்படுத்திய இந்த நடவடிக்கைகள் நல்லது நாங்கள் ஆபத்தை நோக்கி நகரக்கூடாது.

ஒகஸ்ட் இரண்டாம் பாதியில் இருந்து பெரிய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கலாமா என்பதை ஜூலை மாத இறுதியில் அரசாங்கம் முடிவு செய்யும்’ என கூறினார்.

சில அண்டை நாடுகளிலும் பால்கனிலும் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் ஹங்கேரி ஞாயிற்றுக்கிழமை எல்லை தாண்டிய பயணத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

சுமார் 10 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஹங்கேரியில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 4,279பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 595பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...