Main Menu

கொவிட்-19: ரஷ்யாவில் பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஏழு இலட்சத்து 52ஆயிரத்து 797பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த நான்காவது நாடான ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 11ஆயிரத்து 937பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 6,428பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 167பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டு இலட்சத்து 9ஆயிரத்து 168பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து இலட்சத்து 31ஆயிரத்து 692பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, இந்த ஆண்டு உள்நாட்டில் 30 மில்லியன் வீரியம் கொண்ட சோதனைக்குரிய கொவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

பகிரவும்...