Main Menu

கொரோனா வைரஸ் தாக்கம் – ஒரு வாரத்திற்கு முடக்குதலை நீடிக்கிறது நியூசிலாந்து

கொரோனா வைரஸை தாக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக நியூசிலாந்தில் மேலும் ஒரு வாரம் முழுமையாக மூடப்படும் என்றும் அதன் பின்னர் அது குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளுக்கு நகரும் என்று பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்தார்.

இது குருத்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த அவர், “இன்று இரவு 11.59 மணிக்கு 4 ஆம் கட்ட எச்சரிக்கையுடன் முடக்கம் ஒரு வாரத்திற்கு அதாவது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்படும்” என பிரதமர் கூறினார்.

“நாங்கள் மீண்டும் எவ்வாறு கண்காணிக்கிறோம் என்பதை மறுஆய்வு செய்வதற்கு முன்னர், மே 11 ஆம் திகதி அமைச்சரவையில் மேலதிக முடிவு எடுப்பதற்கு முன், நாங்கள் இரண்டு வாரங்களுக்கு எச்சரிக்கை நிலை 3 இல் இருப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

பகிரவும்...