Main Menu

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக் கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழி வகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட ஒரு நோயால் மேலதிகமாக ஒரு இலட்சம் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து அதிர்ச்சிதரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நேரத்தில் 10 நாடுகள் இந்த நோயை முற்றாக கட்டுப்படுத்தியதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மலேரியா சிகிச்சையில் கொரோனா தொற்று விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை ஆபிரிக்காவில் இந்த பிரச்சினை தீவிரமாக உள்ளது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, 90 வீததிற்கும் அதிகமான நோயாளிகள் அக் கண்டத்தில் அடையாளம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...