Main Menu

கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் சுவீடன்

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார்.

தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார்.

இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார்.

உலகில் கொரோனா வைரஸிலிருந்து அதிக இறப்பு விகிதம் ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. நாட்டில் 4,400 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் அண்டை நாடான நோர்வே, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் 600 க்கும் குறைவானோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...