Main Menu

பிரான்ஸில் கடந்த 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டிய உயிரிழப்பு!

கொரோனா வைரஸில் தாக்கத்தினால் பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலவரப்படி மேலும் 107 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28,940 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸின் இந்த உயிரிழப்பு, உலகளவில் ஐந்தாவது மிக அதிகளவான உயிரிழப்புக்கள் சந்தித்த நாடாக கொண்டுவந்துள்ளது.

ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் போலவே, பிரான்ஸிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸின் நிதி அமைச்சர், இந்த ஆண்டு பொருளாதாரம் 11% சரிவடையும் என்றும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நேர்ந்தால் பொருளாதார மந்தநிலை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பகிரவும்...