Main Menu

கொரோனா வைரஸ் – இத்தாலியில் 1000 பேர் பலி – பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4720 ஐ எட்டியுள்ளது.

120 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 128,343 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது, கடந்த 24 மணிநேரத்தில் 188 பேர் இறந்துள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

கொரோனாவால் உலகப் போருக்கு பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியை இத்தாலி எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று (13) காலை முதல் ஆசிய பங்குச் சந்தைகள் பல கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஜப்பானில் நிக்கி குறியீட்டு எண் இன்று 8.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.

ஹாங்காங்கில் ஹாங் செங் 5.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சீனாவின் பங்குசந்தையும் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதேபோல் இந்தியாவின் பங்கு சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. காலை பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி சுமார் 10% வீழ்ச்சியை கண்டதால் 45 நிமிடங்களுக்கு தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...