Main Menu

பிரான்சில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளன.  பிரான்சில் கொரோனா தொறினால் இதுவரை 5,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  தவிர, நேற்று ஞாயிற்றுக்கிழமை  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுகாதார அமைச்சர் Olivier Véran, பரிசில் பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியே செல்வது காணக்கூடியதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. வைரஸ் வெற்று கண்களுக்கு தெரியாதது. இது குறித்து அலட்சியமாக இருக்கவேண்டாம்! என கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...