Main Menu

கொரோனா தொற்று சோதனைக்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்குமாறு மருத்துவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா அறிகுறி காணப்படுவதாக சந்தேகிக்கும் அனைத்து நபர்களையும் சோதனை செய்வதற்கான ஆய்வக வசதிகளை அதிகரிக்க வேண்டுமென மருத்துவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் தவிர கொரோனா சோதனைக்காக கடந்த ஒரு மாதத்தில் மேலும் 2 ஆய்வகங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 15 ஆம் திகதி நிலவரப்படி தமிழகத்தில் 90 பேரின் இரத்த மாதிரிகள் மட்டுமே சோதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அண்டை மாநிலங்களான கேரளாவில் ஆயிரத்து 800, கர்நாடகாவில் 750 பேர் என சந்தேகத்திற்கு இடமான அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் கொரோனா தொற்று சோதனைக்கான அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் ஆனால் அதை கட்டுப்பாட்டுடன் நடத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...