Main Menu

இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட கொரோனா

உலகை மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,171 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக 182,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 79,881 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் இத்தாலியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 349 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் ஈரானில் 14,991 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 853 பேர் உயரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக தென்கொரியாவில் புதிதாக 84 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய அங்கு 8 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தென் கொரியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 137 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள அனைத்து உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் விடுதிகள் இன்று முதல் மூடப்படவுள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் நகர முதல்வர் பில் டி பிளேசியோ தெரிவித்துள்ளார்.

அங்குள்ள உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் விடுதிகளில் மக்கள் ஒன்றுகூடுவதால் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...