Main Menu

கொரோனா : இல்-து-பிரான்சுக்குள் ஒரே நாளில் 164 பேர் சாவு

இல்-து-பிரான்சுக்குள் கடந்த 24 மணிநேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை மொத்தமாக 1999 பேர் இல்-து-பிரான்சுக்குள் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பிராந்திய சுகாதார நிறுவனம் (l’Agence régionale de Santé) இத்தகவலை வெளியிட்டுள்ளது. தவிர, 2,443 பேர் தற்போது இங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரசினால் பிரான்சில் மொத்தமாக 7,560 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக முதலாம் இடத்தில் அமெரிக்காவும், ஐந்தாம் இடத்தில் பிரான்சும் உள்ளது.

பகிரவும்...