Main Menu

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) தகவல்படி,

489 குடும்பங்களைச் சேர்ந்த 1,310 நபர்கள் எட்டு (08) தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, அனர்த்தங்களினால் மொத்தம் 88 வீடுகளும் ஒரு வணிக நிறுவனமும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.