Main Menu

கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்தும் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அங்கு இந்த வைரஸினால் பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 2,045,715 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 114,151 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில், ரஸ்யா, பிரித்தானியா, ஸ்பெய்ன், இந்தியா போன்ற நாடுகள் உள்ளன.

பிரேஸிலைப் பொறுத்தமட்டில் அங்கு பாதிக்கப்பட்டுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய அங்கு இதுவரை கொரோனா வைரஸினால் 742,084 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 38,497 இற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று ரஸ்யாவில் கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை அண்மித்துள்ளது. அதற்கமைய அங்கு 493,657 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,358ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 73 இலட்சத்து 39 ஆயிரத்து 470ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 இலட்சத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...