Day: June 10, 2020
இரண்டு மாதங்களில் பாடசாலைகளை திறக்கவுள்ளதாக தகவல்!
பாடசாலைகளை இன்னும் இரண்டு மாதங்களில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மீள் அறிவித்தல் வரை பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மத்திய மேலும் படிக்க...
ஜூலை 10 முதல் அவசர சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் அரசு தீர்மானம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசர சுகாதார நடவடிக்கைகளை ஜூலை 10 ஆம் திகதியில் இருந்து நிறுத்தி வைப்பது குறித்து பிரான்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் எட்வேர்ட்மேலும் படிக்க...
1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார்
1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்தது
உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் படிக்க...
சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி ஜெ.அன்பழகனின் உடல் அடக்கம்
கொரொனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஜெ.அன்பழகனின் உடலும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி கவச உடை அணிந்தவர்களால் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனாமேலும் படிக்க...
கிழக்கின் தொல்பொருட்கள் இன, மத வேறுபாடு இன்றி பாதுகாக்கப்படும் – பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன, மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் முகாமைத்துவம் குறித்த செயலணியின் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். கிழக்கில்மேலும் படிக்க...
தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவிமேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறை தலைவா்கள் இல்லாத ஐ.நா. கூட்டம்!
ஐ.நா.வின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக உலகத் தலைவா்கள் நேரில் பங்கேற்காத பொதுச் சபைக் கூட்டம் வரும் செப்டம்பா் மாதம் நடைபெறவிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, உலகத் தலைவா்கள் காணொளி முறையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்மேலும் படிக்க...
மத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி
மத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் 50 பேருக்கு உட்பட்ட வகையில் மத நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க...