Main Menu

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம் – நித்யானந்தா

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆற்றியுள்ள சொற்பொழிவிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி என நிரூபித்துள்ளதாகவும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்டதாகவும், கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு பொலிஸாருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், மீண்டும் ‘கைலாசா’, ‘மீனாட்சி மீனாட்சி’ என அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தோன்றி கருத்து வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...