Main Menu

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளை!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் நாளை(புதன்கிழமை) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சில பகுதிகளில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளதுடன், தொடர் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி ம{ஹவா மொய்த்ரா, திரிபுரா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த திரிபுரா பிரத்யோத் கிஷோர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அனைத்து இந்திய அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என 12-இற்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் அனைத்தும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...