Main Menu

கைப்பந்து வீராங்கணை தலை துண்டித்து படுகொலை: தலிபான்கள் கொடூரம்

ஆப்கானிஸ்தானில் கைப்பந்து வீராங்கணை ஒருவரை தலிபான்கள் தலை துண்டித்து படுகொலை செய்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் மகளிர் தேசிய கைப்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொலைஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தலிபான்களால் பெண் வீராங்கணை ஒருவர்,  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மகளிர் தேசிய கைப்பந்து அணி வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி. இவர் இந்த மாதம் தொடக்கத்தில் காபுல் நகராட்சி கைப்பந்து கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் பங்கேற்றுள்ளார்.

இதன்பிறகு, மஹ்ஜூபின் ஹகிமி தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்துவிட்டதாகவும், இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் கைப்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, பயிற்சியாளர் மேலும் கூறுகையில், “கைப்பந்து போட்டியில் பங்கேற்ற வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி இந்த மாத (அக்டோபர்) தொடக்கத்தில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதுப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று தலிபான்கள் மிரட்டி வைத்துள்ளனர்.

மஹ்ஜூபின் மட்டும் இல்லாமல், கைப்பந்து விளையாட்டு அணி உள்பட மற்ற விளையாட்டு வீராங்கணைகளையும் தலிபான்கள் வீடு தேடி மிரட்டி வருகின்றனர். வீட்டைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்திற்கு போய்விடும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், வீராங்கணைகள் விரக்தியிலும், பயத்திலும் உள்ளனர்” என்றார்.   

பகிரவும்...