Main Menu

கைபர் பக்துன்க்வா முதலமைச்சராக இம்ரான் சார்பு அலி அமீன் தெரிவு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சராக இம்ரான் கானின் பி.ரி.ஐ. கட்சி உறுப்பினரான அலி அமீன் கன்டாபுர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இம்மாகாண சட்டமன்றத்துக்காக பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்றதேர்தலில் பி.ரி.ஐ. ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 87 பேரும், நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல். – என் மற்றும் ஜே.யு.எம். கட்சிகள் சார்பில் தலா 9 பேரும்,  ஸர்தாரியின் பி.பி.பி. கட்சி வேட்பாளர்கள் 4 பேரும், பி.ரி.ஐ.பி. உறுப்பினர்கள் இருவரும், அவாமி லீக் சார்பில் ஒருவரும் வெற்றிபெற்றிருந்தனர்.

இந்நிலையில் கைபர் பக்துன்க்வா சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற முதலமைச்சர் பதவிக்கான தேர்தலில் பி.ரி.ஐ. சார்பில்  அலி அமீன் கன்டாபுர், பி.எம்.எல்.-என் சார்பில் இபாதுல்லா கான் ஆகியேர் போட்டியிட்டனர். 

இத்தேர்தலில் அலி அமீன் கன்டாபுர் 90 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இபாதுல்லாவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. 

முதலமைச்சராக தெரிவானபின் அலி அமீன் கன்டாபுர் உரையாற்றுகையில், ‘நாம் எமது சொந்தக்காலில் நிற்க வேண்டும். கடன்களைப் பெற முடியாது. எமது வரி வருமானத்தை அதிகரிப்பதுடன் வறியவர்களுக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

ஊழலை ஒழிக்கப்போவதாக அவர் சூளுரைத்தார். 

அத்துடன், பி.ரி.ஐ. தொண்டர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை ஒரு வாரத்துக்குள் வாபஸ் பெற பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஒரு வார காலஅவகாசம் வழங்குவதாகவும் அவர் கூறினார். 

பகிரவும்...