Main Menu

கென்யாவில் 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு!

கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

9 மாதங்களுக்கு பிறகு நேற்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பாடசாலைகளுக்கு சென்றனர்.

எனினும், பாதுகாப்பு நடவடிக்கையான பாடசாலைகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடைமுறையாக வகுப்புகளில் போதிய இடவசதி இல்லையென்றால் பாடசாலை கட்டடத்திற்கு உள்ளே மரத்தடி நிழலில் வைத்து வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டபோதும் 2020 மார்ச் மாதத்தில் தான் கென்யாவில் வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டன.

பகிரவும்...