Day: January 5, 2021
தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் உயிரிழப்பு!
ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் இறந்துள்ளார். 41 வயதான சோனியா அசெவெடோ, புத்தாண்டு தினத்தன்று வீட்டில் ‘திடீர் மரணம்’ அடைந்தார். பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை பிற்பகுதியில் நடைபெறும்மேலும் படிக்க...
இலங்கைக்கு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இரண்டு நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்களை மூடிமறைக்கும் தரப்பினருடன் இணைய மாட்டோம்- சுரேஸ்
தமிழ் மக்களுக்கு நடந்த அநீயாயங்களை மூடிமறைக்கும் வகையில் செயற்படும் தரப்பினருடன் ஒருபோதும் இணையமாட்டோமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டுமேலும் படிக்க...
கொரோனாவை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கும் என எச்சரிக்கை
கொரோனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய்மேலும் படிக்க...
கென்யாவில் 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு!
கென்யாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 9 மாதங்களுக்கு பிறகு நேற்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பாடசாலைகளுக்கு சென்றனர். எனினும், பாதுகாப்பு நடவடிக்கையான பாடசாலைகளுக்குமேலும் படிக்க...
பறவைக் காய்ச்சலை தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல திட்டம்!
கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாத்துகளால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளித்தது தமிழக அரசு
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம்- நல்லூர் ஆதீன முன்றலில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் உறவை வலுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இரு நாட்டுக்கும் இடையில் அரசியல் ஆலோசனை பொறிமுறையை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டத்திற்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்மேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை: ANSM
பிரான்ஸில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளால் எந்த விரும்பத்தகாத விளைவுகளும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பு நிறுவனமான, ANSM (Agence nationale de sécurité du médicament et des produits deமேலும் படிக்க...
வடக்கில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு- கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 21ஆம் ஆண்டு நினைவு தினம்மேலும் படிக்க...