Main Menu

கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் சம்பந்தன்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள  கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,

இன்று அல்லது நாளை கட்சியின் அடுத்த கட்ட கூட்டங்கள் சந்திப்புகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படும். அதேபோல் கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டப்படவுள்ளது. அதற்கு முன்னதாக பங்காளிக்கட்சிகளை தனித் தனியே சந்தித்து பேச சம்பந்தன் அவர்கள் தீர்மானம் எடுத்துள்ளார். 

பங்காளிக்கட்சிகள் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஒரு சிலர் ஆதரவை தெரிவித்துள்ள போதிலும் ஒரு சிலர் இன்னமும் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அனைவரும் பொது நிலைப்பாடு ஒன்றினை எட்டி கூட்டான இணைந்து பயணிக்க முடியும். அது குறித்து விரைவாக பேசுவோம். 

அதேபோல் எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில் என்றைய தினமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கும். விரைவில் எமது நிலைப்பாடுகள் அறிவிக்கப்படும் என்றார்.

பகிரவும்...