தமிழக கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர தீர்வு: ஜூலையில் இந்தியா செல்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுகாண, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களைத் தடுக்க கடற்படை மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதேவேளை, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் முதற்கட்ட கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது, தமிழக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
திரைப்படங்களில் நீதிக்காகப் போராடிய அதே நேர்மையை முதலமைச்சர் விஜய் அரசியலிலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பரஸ்பர புரிந்துணர்வின் மூலம் இரு நாட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும், கடல் வளங்களும் பாதுகாக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
