Main Menu

குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து?

குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களினால் இதுகுறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோனின் அளவு வசந்த காலத்தில் அல்லது கோடைகாலத்தில் பிள்ளைகளை பெற்றெடுப்பவர்களை விட இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் குழந்தைகளை பிரசவிக்கும் பெண்களில் அதிகமாக இருப்பதை இதன்போது ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன்காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மனநலக் கோளாறுகள் உருவாகும் ஆபத்து காணப்படுவதாகவும் கார்டிஃப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஸ் ஜோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக மனச்சோர்வுடன் காணப்படுகின்றமை இதன்போது கண்டறிப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

316 பெண்கள் இதுகுறித்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும் கார்டிஃப் பல்கலைக்கழக பேராசிரியர் ரோஸ் ஜோன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...