Main Menu

கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம்: இத்தாலி அறிவிப்பு!

கிறிஸ்மஸ் புதுவருட காலப்பகுதியில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுவதாக இத்தாலி அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கிறிஸ்மஸ் புதுவருட கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழமையாகும்.

எனினும், இத்தாலியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக குறித்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பொது விடுமுறை நாட்களில் நாடு சிவப்பு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மேலதிகமான கடைகள், உணவகங்கள், மற்றும் மதுவிடுதிகள் என்பன மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தடை அமுல்படுத்தப்பட்டிருக்கும் நாட்களில் வேலை, மருத்துவம், ஆகிய தேவைகளுக்காக மட்டும் இத்தாலியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பண்டிகை நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களே ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த தீர்மனம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள, இத்தாலி பிரதமர், ‘இது ஓர் இலகுவான தீர்மானம் இல்லை.  கிறிஸ்மஸ் காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என எமது நிபுணர்கள் கருதுகிறார்கள். அதன்காரணமாகவே குறித்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்களினால் அதிகளவான பாதிப்புகளை எதிர்கொண்ட ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி முதல் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...