Main Menu

நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றார் நெதன்யாகு!

71 வயதுடைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டில் முதலாவது நபராக கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார்.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட குறித்த தடுப்பூசி பெற்றபோது, நெதன்யாகு இஸ்ரேலின் தடுப்பூசி பிரசாரத்தை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

டெல் அவிவ் அருகே ரமத் கானில் உள்ள ஷெபா வைத்திய மையத்தில் தடுப்பூசியை நெதன்யாகு போட்டுக் கொண்டதுடன், அவர் தனது நண்பர்களையும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

சுமார் 9 மில்லியன் சனத் தொகை கொண்ட இஸ்ரேலில் 3 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...