Main Menu

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் பேசிய துருக்கி ஜனாதிபதிக்கு இந்தியா கண்டனம்

காஷ்மீர் விவகாரம் குறித்து  ஐ.நா. சபையில் உரையாற்றிய துருக்கி  ஜனாதிபதி எர்டோகனின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் (United Nations General Assembly session) காணொலி மூலம் உரையாற்றிய எர்டோகன் காஷ்மீர் பிரச்சினை தீர்வு காணப்படாமல் இருப்பதால் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் வகையில் எர்டோகன் பேசியிருப்பதாகவும் இதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

பகிரவும்...