Main Menu

தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க விஜய், மோடியிடம் கோரிக்கை

இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளன.

தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.