Main Menu

காட்டுத் தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் உயரமான மரம்

காட்டுத்தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் ‘உயரமான மரம்’ அடையாளம் காணப்பட்டுள்ளன.

அமேசனின் மிகவும் உயரமான மரம் குறித்த விவரங்களை பிரேசில் மற்றும் பிரித்தானியா அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமேசன் காடுகளில் தொடர்ந்தும் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு பல அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், இதில் பல்லாயிரக்கணக்கான மரங்களும், பறவைகளும், விலங்குகளும் உயிரிழந்துள்ளன. ஆனால், இந்தக் காட்டுத்தீயில் எவ்வித சேதாரத்தையும் சந்திக்காமல் சில மரங்கள் இருந்துள்ளன.

அவை மிகவும் உயரமாக இருக்கும் காரணத்தினாலே இந்தக் குறிப்பிட்ட ரக மரங்கள் காட்டுத்தீக்கு இரையாகாமல் இருந்துள்ளன.

அந்தவகையில் டினிஜியா எக்செல்சா (Dinizia Excelsa) என்ற மர வகைகள் மிகவும் உயரமானதாக இருந்ததால் காட்டுத்தீயால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் காட்டுத்தீயால் காடு முற்றிலும் சேதமானதால் இந்த மரங்கள் தனியாகத் தெரிந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த Dinizia Excelsa ரக மரங்களே அமேசனின் மிகவும் உயரமான மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. இவ்வகை மரங்கள் 288 அடி உயரம் கொண்டுள்ளதுடன் அதன் சுற்றளவு 5.50 மீற்றராகும்.

உலகின் மிகவும் உயரமான மரம் கலிஃபோர்னியா ரெட்வுட் மரங்களாகும். இந்த மரத்தின் உயரம் 379.3 அடியாகும். எனினும் மரத்தின் மேற்பகுதியில் மரங்கொத்திகளால் ஏற்பட்ட சேதத்தினால் இம்மரம் மேலும் உயரமாக வளராமல் போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பகிரவும்...