Main Menu

அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியானது!

அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் நிறைவில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பட்டியலில் நான்காவது தடவையாகவும் தாய்லாந்து தலைநகர் பேங்கொக் முதலிடத்தினை பிடித்துள்ளது.

அங்கு ஆண்டிற்கு 2 கோடியே 28 இலட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அத்துடன், குறித்த பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களை பரிஸ் மற்றும் லண்டன் நகரங்கள் பிடித்துள்ளன.

இங்கு ஆண்டிற்கு தலா 1 கோடியே 91 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

இந்த பட்டியலில் டுபாய் மூன்றாவது இடத்தினையும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை தென்கிழக்கு ஆசிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் பிடித்துள்ளன.

நியூயோர்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் என முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

பகிரவும்...