Main Menu

கஸகஸ்தானில் வன்முறையை ஒடுக்க ரஷ்ய தலைமையிலான படைகள் களமிறக்கம்!

கஸகஸ்தானின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்ய தலைமையிலான படைகள் கஸகஸ்தானுக்கு வந்துள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையை ஒடுக்க அவர் கள பணியில் ஈடுபடுவார்கள்.

மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் நேற்று (வியாழக்கிழமை) இரவில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஐ.நா., அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வன்முறையை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, 3,000க்கும் மேற்பட்டவர்கள் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 748 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பகிரவும்...