Main Menu

கஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானியா விரும்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

கஷோக்கியின் மரணம் குறித்து சவுதி அரேபியா முழுமையாகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் விதத்திலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் மே இன்று தெரிவித்துள்ளார்.

கஷோக்கியின் படுகொலை தொடர்பாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நம்பகமான ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ள காரணத்தால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் புலனாய்வாளர் ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்த படுகொலை சம்பவம் குறித்து இன்று பிரித்தானியா பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மே

இந்த கொடூரமான கொலைக்கு நாங்கள் பொறுப்புக்கூறலைக் காண விரும்புகிறோம். சர்வதேச மற்றும் தேசிய சட்டங்களின் மீறல்கள் மீண்டும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கை சவுதி அரேபியா எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இப்படுகொலை மீதான தொடர்ச்சியான விசாரணையை நாங்கள் நெருக்கமாகப் பின்தொடர்கிறோம். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத் தரங்களுக்கு ஏற்ப தொடரும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...