Main Menu

கள­மி­றங்கும் எனது தீர்­மா­னத்தில் சிறி­தேனும் பின்­ வாங்க மாட்டேன்: சஜித் பிரே­ம­தாஸ

குறுக்கு வழியில் ஒரு­போதும்  ஆட்­சி­ய­தி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதே­போன்று ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வுள்ள தீர்­மா­னத்தில் இருந்து சிறி­தேனும் பின்­வாங்­கவும் மாட்டேன். ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக பாரிய சேவைகள் செய்­துள்ள என்னை  ஆத­ரிப்­பதில் தலை­மைத்­துவம்  தயக்கம் கொள்ளும் பின்­னணி அறி­யப்­ப­ட­வில்லை என  அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  உள்­ளூ­ராட்­சி­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும்,  அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு  வழங்கும் ஆளும் தரப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று  சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் இடம் பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   நான் கள­மி­றங்க வேண்டும் என்று தற்­போது  அடி­மட்­டத்தில் இருந்து  ஆத­ரவு குரல் எழும்­பி­யுள்­ளது.  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் அனைத்து தகு­தி­களும் எனக்கு  உண்டு .  ஜனா­தி­பதி வேட்­பாளர்  தொடர்பில் இதர கட்­சி­களின்  தீர்­மா­னங்கள்  அவர்­களின் தனிப்­பட்ட தீர்­மா­ன­மாகும். ஆனால் அர­சியல் களத்தில் நாட்டு மக்­க­ளுக்கு உண்மை நிலை­வ­ரங்கள் எடுத்­து­ரைக்­கப்­பட வேண்டும்.

  அர­சியல் மற்றும் மக்கள் சேவை­களில் இருந்து  மிக தொலைவில் உள்­ள­வர்­களே இன்று மக்­க­ளா­ணை­யினை பெற முயற்­சிக்­கின்­றார்கள்.  ஆனால் நான் அவ்­வாறு அல்ல. எனது தந்­தையார் முன்னாள் ஜனா­தி­பதி  ரண­சிங்க பிரே­ம­தாஸ    கட்­சிக்­கா­கவும், நாட்டு மக்­க­ளுக்­கா­கவும் சேவை­யாற்றி உயிர் தியாகம் செய்தார். அவர் வழி­யிலே  நானும் அர­சியல் பணி­யினை தொடர்ந்­துள்ளேன்.  பல்­லா­யிரக் கணக்­கான மக்கள்,  ஐக்­கிய தேசியக்  கட்­சியின்  பெரும்­பா­லான உறுப்­பி­னர்­களின் அர­சியல் தீர்­மா­னங்கள் ஒரு­மித்து காணப்­படும் போது கட்சித்  தலை­மைத்­துவம் மக்­களின் குறிப்­பாக  ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களின் அர­சியல் அபிப்­பி­ரா­யங்­களை செயற்­ப­டுத்­து­வதில்  தயக்கம் காட்டும் பின்­ன­ணியை அறிய முடி­ய­வில்லை.

 மக்­களின் அர­சியல் தீர்­மா­னமே  நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே  நாடு தழு­விய ரீதியில் தொடர் மக்கள் சந்­திப்­புக்கள் இடம் பெறு­கின்­றன.  ஐக்­கிய தேசியக் கட்­சியை  பல­வீ­னப்­ப­டுத்தி  அதி­கா­ரத்­திற்கு வரும் நோக்கம் ஒரு­போதும் கிடை­யாது. இன்று பல­ருக்கு யதார்த்த அர­சியல் நிலை­மையும், கடந்து வந்த அர­சியல் பாதை­களும் மறக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டமை யாவரும் அறிந்­ததே.  நெருக்­கடி வேளையில்   பல­முறை  பிர­தமர் பத­வியை பெற்றுக் கொள்­ளு­மாறு  ஜனா­தி­பதி குறிப்­பிட்ட போது நான்  மறுத்தேன். அதற்கு காரணம்  பிர­தமர் பத­விக்கு   நான் தகை­மை­யற்­றவன் என்ற அர்த்­தத்தில் அல்ல. அப்­ப­த­வியை  பெற்றுக் கொள்ள கூடாது என்­பதே  ஆகும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பான்மை ஆத­ர­வு­டனே  பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்டார். ஆகவே அவரே அப்­ப­த­வியை வகிக்க வேண்டும்.

குறுக்கு வழி­யிலோ சூழ்ச்­சி­யி­னாலோ ஒரு­போதும் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள வேண்­டிய  அவசியம் கிடை­யாது.  மக்­களின் ஆத­ரவு முழு­மை­யாக காணப்­ப­டு­கின்­றது.   மக்­க­ளா­ணையின் ஊடா­கவே உயர் பத­வியை பெறுவேன். இதில் எவ்­வித மாற்­றமும் கிடை­யாது. தற்­போது முன்­னெ­டுத்­துள்ள  இப்­போ­ராட்­டத்தில் இருந்து சிறி­தேனும் பின்­வாங்க மாட்டேன். 

2015ஆம் ஆண்டு நாட்டில் பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின்  நல்லாட்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டும் இந்நிலைமையே தொடரும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்கு சிறந்த  அபிவிருத்திகளையே தொடர்ந்து முன்னெடுக்கும் என்றார்.

பகிரவும்...