Main Menu

கலிபோர்னிய உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு : ஐவர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

அமெரிக்க – கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற கலாசார உணவுத் திருவிழாவில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

‘The Gilroy Garlic Festival’ எனப்படும் குறித்த பாரம்பரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவை எட்டிய போது, திருவிழா திடலில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

30 வயது மதிக்கத்தக்க வௌ்ளையினத்தவர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் திடலுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் (San Jose) நகரின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு மலைப்பகுதியில் கார்லிக் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் உணவுத் திருவிழா 1979-ம் ஆண்டில் இருந்து பாரம்பரியமாக இடம்பெற்று வருகின்றது.

3 நாட்கள் நடத்தப்படும் இந்த திருவிழாவில் உணவு சமைத்தல் போட்டி, உணவுக்கூடங்கள், கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை நிறைந்திருக்கும். இந்த திருவிழாவுக்கு வரும் மக்கள் யாரும் எந்தவிதமான ஆயுதங்களையும் எடுத்துவருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, பொலிஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், “பொதுமக்கள் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...