Main Menu

கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு

மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இந் நிலையில், முகமது முய்சு துருக்கி மற்றும் சீனாவிடம் நிதி உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்தியாவுக்கு எதிரான போக்கைதான் பின்பற்றினார். பின்னர், அதிபரான பிறகு சீனாவுடன் நெருக்கமாக உள்ளார்.

மேலும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேறும்படியும் கூறி வருகிறார். இதனிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனால், இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதை புறக்கணித்து வருகின்றனர்.

இதனால், கடந்த மூன்று மாதங்களாக மாலத்தீவு சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இது மாலத்தீவின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவு அரசுக்கு சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், மாலத்தீவு திவாலாகிவிட்டதாகவும் சர்வதேச நிதியத்திடம் பெயில் அவுட் தொகை கேட்டதாகவும் தகவல் வெளிவந்த நிலையில், மாலத்தீவு அதனை மறுத்துள்ளது.

ஆனால், மாலத்தீவு திவாலாகவில்லை என்றாலும்,வெளிநாட்டுக் கடனுடன் கிட்டத்தட்ட 4.038 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் உள்நாட்டுக் கடன்கள் 2026 -ல் வரவிருக்கும் கடன் நெருக்கடியுடன் ஒப்பிடும் அளவுக்கு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா மற்றும் துருக்கியிடம் மாலத்தீவு நிதியுதவி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் முன்வரவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமால்லாமல், சீனா தான் கொடுத்த கடனை திருப்பி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற முகமது முய்சு, சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், சீனாவை நெருங்கிய நண்பர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...