Main Menu

ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தவிருங்கள்- MHRA அறிவுறுத்து!

கொரோனா தொற்றுக்கு எதிரான பிரித்தானியாவின் வெகுஜன தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் பங்கேற்றவர்களில் இருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு இருப்பதை இங்கிலாந்தின் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

குறித்த இருவருக்கும் நேற்று ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்களுக்கு தோல் கடி, மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் இரத்த அழுத்தம் ஆகியன ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒவ்வாமை போன்ற எதிர்விளைவுகள் உள்ளவர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு கட்டுப்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, மருந்துகள், உணவு அல்லது தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை காணப்படுபவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தும் என மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...