Main Menu

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும்: ஜேர்மனி

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கு பிரித்தானியா பிரெக்ஸிற் தொடர்பான தமது தெளிவான திட்டங்களை வெளியிட வேண்டும் என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் எதுவுமின்றி பிரித்தானியா வெளியேறுவதைத் தவிர்ப்பது தொடர்பாக பிரித்தானியாவுடன் விவாதிக்க ஜேர்மனியும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை தடுக்க விரும்புவதாக பிரித்தானிய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது, இது தொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என இன்று பேர்லினில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மாஸ் கூறியுள்ளார்.

ஒழுங்கான பிரெக்ஸிற்றை நாங்கள் சாத்தியமாக்க வேண்டும், இதுவே விரும்பத்தக்கது, ஆனால் இது இடம்பெறுவதற்கு எங்களுக்கு இறுதியாக பிரித்தானியாவிடம் இருந்து தெளிவான ஓர் முடிவும் தெளிவான திட்டங்களும் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பகிரவும்...