Main Menu

ஒக்ரோபர் 31 இல் பிரெக்ஸிற் நிகழ்வது உறுதி: பிரதமர்

நான் சட்டத்துக்கு கீழ்ப்படிவேன் ஆனால் ஒக்ரோபர் 31 இல் ஒப்பந்தத்துடனோ ஒப்பந்தமின்றியோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் 19 ஆம் திகதிக்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்று எட்டப்படா விட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் மேலும் மூன்று மாத கால தாமத்துக்கான கோரிக்கையை பிரதமர் முன்வைக்க வேண்டுமென சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நான் அரசியலமைப்பை ஆதரிப்பேன், சட்டத்திற்குக் கீழ்ப்படிவேன், ஆனால் ஒக்ரோபர் 31 ஆம் திகதியன்று நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோமென பிபிசி-க்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பிரெக்ஸிற்றை மேலும் தாமதப்படுத்தப் போவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வது முக்கியம் என தெரிவித்த போதிலும் ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் நீடிப்பு கேட்பதை எவ்வாறு தவிர்ப்பார் என்பது குறித்து பிரதமர் குறிப்பிடவில்லை.

பகிரவும்...