Main Menu

ஈ – கொலி பக்றீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சிறுவன் உயிரிழப்பு!

பிரான்சில் வசித்த சிறுவன் ஒருவன் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு அங்காடியில் மாட்டிறைச்சி கலந்த சிற்றுண்டியை உண்ட நாளில் இருந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளான்.

10 வயதான நோலன் மொய்ற்றி என்ற குறித்த சிறுவனின் திடீர் உடல்நலக் குறைவுக்கு காரணம் தெரியாமல் பெற்றோர் திகைத்துப் போயிருந்தனர்.

இந்த நிலையில், ஈ – கொலி (E. coli bacteria) என்ற பக்றீரியா தாக்கத்தினால் அந்த சிறுவன் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நோலன்னுடன் சிற்றுண்டிச் சாலையில் மாட்டிறைச்சி அடங்கிய உணவருந்திய மேலும் 14 சிறார்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...