Main Menu

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்!

கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க டென்மார்க் தயாராகியுள்ளது.

இதற்கமைய டென்மார்க், எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட ஷெங்கன் நாடுகள் புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சுவீடன் மற்றும் போர்த்துக்;கல் ஆகியவை அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை என்று அது கூறியுள்ளது.

வாரத்திற்கு 100,000 மக்களுக்கு 20இற்க்கும் குறைவான தொற்றுநோய்களைக் கொண்டிருந்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

பகிரவும்...