Main Menu

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைப் பயிற்சியா?

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

யோகா, நடைப்பயிற்சிநடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஒரு மணி நேரம் யோகா செய்வதால் 340 கலோரிகள் எரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆகவே, எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டில், நடைபயிற்சியை விட யோகா சிறந்தது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

யோகா, உடல் மற்றும் மனநலத்திற்கு சிறந்தது. நடைபயிற்சி என்பது ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே. ஆனால் இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை புரிகிறது. ஆனால் யோகா செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடைக்கிறது. நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது யோகா. பதட்டம் மற்றும் கோபத்தை குறைக்க உதவுவது யோகா. ஆன்மீக யோகாசனம் , உங்கள் சுவாசத்தை மேம்படுத்துகிறது. யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) போன்றவற்றின் மீது ஒரு சிறந்த கட்டுப்பாடு தோன்றுகிறது.

பலர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இது மிகவும் உண்மை. மற்றும் நடைபயிற்சியால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த செயல்பாடு நடைபயிற்சியை விட யோகாவில் அதிகம் உண்டு. இரத்த சர்க்கரை அளவை வளர்சிதை மாற்றத்தின் மூலம் குறைப்பது யோகாவில் இன்னும் சிறப்பாக செயலாற்றல் பெரும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே சில சிறப்பு யோகா பயிற்சிகள் உண்டு. இதனை இவர்கள் மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறைகிறது.

மன அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பது நடைபயிற்சி அல்லது யோகா, இந்த இரண்டில் எது என்பதை இப்போது பார்க்கலாம். மன நிலையை உயர்த்தி, அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் யோகா பயிற்சி செய்வதால், உங்கள் மன நிலையில் உயர்வு ஏற்பட்டு, கவனமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் நன்னடத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் உண்டான தசைகள், திசுக்கள் மற்றும் மூளைக்கு நெகிழ்வைத் தரும் தன்மை யோகாவிற்கு உண்டு. யோகாவை தினமும் பயிற்சி செய்வதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் தூக்க கோளாறுகள் நீக்கப்பட்டு தூக்கம் மேம்படும். ஆகவே, யோகாவின் மூலம் ஒட்டுமொத்த மனித நல் வாழ்க்கை மேம்படும்.

யோகா, உங்கள் அழகை நிர்வகிக்கவும் உதவுகிறது. அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால் தினமும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை மினுமினுப்பாகவும் துடிப்பாகவும் வைக்க யோகா உதவுகிறது. மூளையில் இயல்பான இரசாயன சமநிலையை நிலைநிறுத்த யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் வழங்குதல் அதிகரிக்கப்படும். ஆக்சிஜன் அதிகம் உள்ள இரத்தம், அணுக்களையும் திசுக்களையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால், சருமத்தின் மேல்புறம் உள்ள கொலோஜென் நார்கள் வலிமையாகும். இதனால் உங்கள் சருமம் களங்கமில்லாமல் பொலிவாக இருக்கும். ஆகவே யோகா பயிற்சியால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

இப்போது யோகா மற்றும் நடைபயிற்சியில் எது சிறந்தது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். நடைபயிற்சி, உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், யோகவே சிறந்த விளைவுகளைத் தருகிறது. இதனால் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. நடைபயிற்சியுடன் யோகாவையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா வயதினருக்கும் இந்த இரண்டு பயிற்சிகளும் ஏற்புடையது. ஜிம் சென்று பயிற்சிகள் செய்வது மிகவும் விலை உயர்ந்த பயிற்சியாகும் . இதனை விட இவை இரண்டும் அதிக பலன் தருபவையாகும். ஆனால், இந்த இரண்டில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்தால் அது யோகா தான். யோகாவின் மூலம் சிறப்பான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

பகிரவும்...