Main Menu

ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தையிலிருந்து அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகல்!

ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு தனது கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையிலிருந்து பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனகா நிறுவனம் விலகியது.

ஒக்ஸ்ஃபோர்ட்- அஸ்ட்ராஸெனகா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதாக அஸ்ட்ராஸெனகா நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளிக்கவுள்ளது.

அதற்குப் பிறகு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அஸ்ட்ராஸெனகாவை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தும்.

உலகின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் இஸ்ரேல், பிரித்தானியா போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளது.

சுமார் 45 கோடி பேர் வசிக்கும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில், கொரோனா பாதிப்பால் ஏற்கெனவே 4 இலட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...