Main Menu

கொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்!

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடியூட்டின் (Lowy Institute) புதிய பகுப்பாய்வில் இலங்கை பத்தாவது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் நியூஸிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், வியட்நாம், தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. மேலும் அவுஸ்ரேலியா எட்டாம் இடத்திலும் உள்ளது.

லோவி இன்ஸ்டிடியூட் கிட்டத்தட்ட 100 நாடுகளின் கொரோனா வைரஸ் நிலைமைகளை கருத்திற்கொண்டே இந்த தரவினை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நோயாளர்களது எண்களையும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர்.

கொரொனா ஷ தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா 94ஆவது இடத்திலும் இந்தோனேஷியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86 ஆவது இடங்களையும் பிடித்துள்ளன.

பகிரவும்...