Main Menu

ஐரோப்பாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பிரான்ஸ்- ஸ்பெயினில் உச்ச பாதிப்பு!

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

இரண்டாவது தொற்றலையாக பார்க்கப்படும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால், ஸ்பெயினில் மட்டும் கடந்த 24மணித்தியாலத்தில் 11ஆயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 130பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை சந்தித்த எட்டாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், ஆறு இலட்சத்து 93ஆயிரத்து 556பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 034பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பிரான்ஸிலும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவருகின்றது.

பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 13ஆயிரத்து 72பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை சந்தித்த 11ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், நான்கு இலட்சத்து 81ஆயிரத்து 141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31ஆயிரத்து 459பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 640பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...