Main Menu

ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(20) இடம்பெறவுள்ளது.

கொழும்பில் நேற்று(19) ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 42 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இவற்றில் 35 நாடுகளின் விவசாய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் 300-இற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநாட்டின் பிரதம விருந்தினராக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் Qu Dongyu பங்கேற்கின்றார்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் சர்வதேச நாடுகளின் அதிகளவான பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் பங்கேற்கும் நிகழ்வு இதுவென விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு வரை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டிற்கான தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்படுகின்றது.

பகிரவும்...