Main Menu

ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு செல்வதை தவிக்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தாக்குதல்களின் எதிரொலியாக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட பல நாடுகள் தமது பிரஜைகளுக்கு இலங்கைக்கு செல்வதற்கு பயணத்தடை விதித்திருந்த நிலையில், பின்னாட்களில் அவை படிப்படியாக நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று கடந்த திங்கட்கிழமையுடன் ஆறு மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதித்த பயணத்தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தி அண்மையில் ருவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, குறித்த ருவீட் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...