Main Menu

எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக் குறிக்கும் நிறம் வெளியீடு!

எதிர்வரும் 2020ஆம் ஆண்டைக்குறிக்கும் நிறம் வெளியிடப்பட்டுள்ளது.

Pantone நிறுவனத்தினால் இந்த நிறம் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்த ஆண்டின் நிறம் ‘Classic Blue’ எனும் ஒரு வகை நீல நிறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே அதிகரிக்கும் பதற்றம், மனஉளைச்சலுக்கு ஒரு தீர்வாக நிறம் இருக்கும் என நம்பப்படுகிறது.

நிறத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

அவற்றுடன் நிறத்தைக் கொண்ட துணி வகையும், நிறத்தின் சுவையைக் குறிக்கும் தேநீர் வகையும் வெளியிடப்படவுள்ளன.

கடந்த 21 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டைக் குறிக்கும் நிறத்தை Pantone நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...