Main Menu

எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன

எகிப்தில் 2,500 ஆண்டுக்கு முன்னர் புதைக்கப்பட்ட சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கைரோவில் (Cairo) உள்ள சக்காரா (Saqqara) எனும் கல்லறையில் 59 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

12 மீட்டர் ஆழத்தில் இருந்த அந்த மரச் சவப்பெட்டிகள், சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

அவை எகிப்தின் 26-ஆவது அரசர்குலத்தைச் சேர்ந்த சமய குருக்கள், அரசாங்கப் பதவி வகித்தோர் ஆகியோரின் சவப்பெட்டிகளாக இருக்கலாம் என்று முன்னோடி ஆய்வுகள் கூறுகின்றன.

கல்லறையில் மேலும் அதிகமான சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து சவப்பெட்டிகளும் விரைவில் திறக்கப்படவிருக்கும் Grand Egyptian Museum அரும்பொருளகத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அடுத்த ஆண்டு திறக்கப்படவிருக்கும் அரும்பொருளகம் ஆயிரக்கணக்கான கலைப்பொருள்களைக் கொண்டிருக்கும். 

பகிரவும்...