Main Menu

ஊடக செயலமர்வில் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டது -அமைச்சர் பந்துல குணவர்தன

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக நடைபெறும் செயலமர்வில் அரச மற்றும் தனியார் துரையின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்;

ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் செயலமர்வுகள் ஒருங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது குற்றங்களை அறிக்கையிடுதல், வெறுப்புப் பேச்சு, தனிப்பட்ட தகவல்களை அறிக்கைப்படுத்தல், வலுவில்லாத மற்றும் பொய்யான தகவல்களை அறிக்கையிடல் போன்றவை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டப்பட்டது.

பிரதேச ஊடகவியலாளர்களை தொடர்பு படுத்தி இச்செயலமர்வுகள் இடம்பெற்றன. தற்போது மேற்கு, வடமத்தி, வடமேல், சபரகமுவ, போன்ற மாகாணங்களில் இச்செயலமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதில் 373 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

கிழக்கு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் இச்செயலமர்வு நடைபெற்றுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் 46 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ் மொழி பேசும் ஊடகவியலாளர்களுக்காக தமிழில் விரிவுரைகள் மொழிபெயர்ப்புடன் வழங்கப்பட்டன.

மஹிந்த பதிரண, பேராசிரியர் ரங்க கலன்சூரிய மொஹான் சமரநாயக, நாலக குணவர்தன, ஜகத் லியனாராச்சி, மதுபாஷிணி கலகெதர, விஜயானந்த ரூபசிங்க, சிசிர பரணதந்திரி, ஹர்ஷ அபேகோன் போன்றவர்கள் விரிவுரைகளில் கலந்துகொண்டனர்.

இதற்கான முழுமையான நிதி அனுசரணை, நிகழ்ச்சிக்கு அவசியமான இடம் வழங்கல், ஒருங்கிணைப்புச் செலவு போன்ற சகல செயற்பாடுகளும் இந்த நிதியத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தனியார் மற்றும் அரச ஊடகங்கள் போன்ற  சகல துறையினரும் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். விரிவுரைகளை நடாத்துவதற்ககாக  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி   நிதியம்  அழைத்திருந்தவர்கள் சமூகமளித்திருந்தார்கள். இச்செயலமர்விற்கு அரசாங்க நிதியில் எவ்வித செலவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் விபரித்தார்.  

பகிரவும்...