Main Menu

உள்ளூராட்சி தேர்தல் : சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் , சட்டத்தை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பல பரிந்துரைகள் சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டம் தொடர்பான சில பரிந்துரைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது ஆலோசித்து வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் அடுத்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மாத்திரமே காலாவதியாகும் எனவும் அதற்கு முன்னதாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பகிரவும்...