Main Menu

உலக பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவிய பிரித்தானிய இளைஞன்!

அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானியாவின்  பொக்னர் ரெஜிஸ் (Bognor Regis) பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மெசன் ஷெப்பர்ட் (Mason Sheppard) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாத இறுதியில் இடம்பெற்ற குறித்த இணைய ஊடுருவல் குறித்து அமெரிக்க நீதித்துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரில் குறித்த பிரித்தானிய இளைஞனம் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர்களான பில்கேட்ஸ், எலோன் மஸ்க் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்குச் சொந்தாமான ருவிற்றர் கணக்குகளில் இணைய மோசடிக் கும்பல் ஊடுருவியிருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஊடுருவலில், முக்கியஸ்தர்களின் கணக்குகள் ஊடாக பிற்கொயின் பண மோசடி முன்னெடுக்கப்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில் ருவிற்றர் நிறுவனமும் அமெரிக்க நீதித்துறையும் தீவிர விசாரணையை முன்னெடுத்தன.

இந்நிலையில், ருவிற்றர் கணக்குகளைில் ஊடுருவியமை, ஆயிரக்கணக்கான டொலர் மதிப்புள்ள பிற்கொயின் மோசடி, கம்பி மோசடி செய்யச் சதி ஆகியவற்றுடன் குறித்த பிரித்தானிய இளைஞனுடன் மேலும் இருவர் குறித்து அமெரிக்க நீதித்துறை தகவல் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...